- மாவட்ட கலெக்டர்
- விக்கிரவாண்டி
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நாளை(10.07.2024) நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு நடைபெறும் நாளான 10.07.2024 அன்று விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் அரசுத் துறை, பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசாணை எண். 449. Public (Miscellaneous) Department [ 27.06.202460 Under the “Explanation” to Section 25 of the Negotiable Instruments Act, 1881 (Central Act, XXVI of 1881)-31 L1Q அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் விதமாக விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு (Vote) உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் விடுப்பு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்கள், நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
The post விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.