×
Saravana Stores

வெங்கமேடு அருகே கார் மோதி தனியார் ஊழியர் பலி

கரூர், ஜூலை 9: கரூர் வெங்கமேடு அருகே நடந்து சென்றவர் கார் மோதி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வெங்கமேடு அடுத்துள்ள பெரிய கோதுரைச் சேர்ந்தவர் மோகன்(54). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 7ம் தேதி மாலை கரூர் சேலம் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் மோகன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், படுகாயமடைந்தவர், ஆபத்தான நிலையில் அரசு மருததுவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார், கார் டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெங்கமேடு அருகே கார் மோதி தனியார் ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Vengamedu ,Karur ,Mohan ,Periya Kodur ,Karur Vengamedu ,Venkamedu ,
× RELATED மின் மோட்டார் திருட்டு போலீசார் வழக்கு பதிவு