- தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பு
- கரூர்
- தமிழ்நாடு ஆரம்பக் கல்வி ஆசிரியர்
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டம்
- கரூர் தாந்தோணிமலை மாவட்ட கல்வி அலுவலகம்
கரூர், ஜூலை.9: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வதுரை தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாநில சீனியாரிட்டியை ரத்து செய்து, ஒன்றிய சீனியாரிட்டி நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post கரூரில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.