×
Saravana Stores

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

கூடலூர், ஜூலை 9: கூடலூர் சாலீஸ்பரி உறுப்பினர் நல சங்க கூட்டம் தொழிற்சாலை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசகர் சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தராஜா, அப்பாஸ், சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடந்த 2022-23ம் ஆண்டுக்கான ஊக்க தொகையாக பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வழங்கியுள்ளதை வரவேற்று இதற்கான நிதியினை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, எம்பி ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் வேளாண் துறையும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியும் பரிந்துரை செய்த பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையான ரூ.33.75 உடனடியாக வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில், துணைத்தலைவர் அசைனார் நன்றி கூறினார்.

The post தேயிலை விவசாயிகளுக்கு மானியம் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Salisbury ,Welfare ,Association ,Factory Meeting Hall ,Ganapathy ,Subramaniam ,Anandaraja ,Abbas ,Sivasamy ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்; வாகன ஓட்டிகள் அச்சம்