- அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்
- கரூர்
- மாவட்டம்
- கலெக்டர்
- தங்கவேல்
- அரசு தொழிற்பயிற்சி மையம்
- தொழில் பயிற்சி மையம்
- கரூர்...
- தின மலர்
கரூர், ஜூலை 8: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஜூலை 1ம்தேதி முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் ஜூலை 15ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தையல் தொழில்நுட்ப பயிற்சி, (8ம்வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி, பயிற்சி காலம் 1 ஆண்டு, மகளிர் மட்டும்). கணினி தொழில்நுட்ப பயிற்சி (10 வகுப்பு தேர்ச்சி, 1 ஆண்டு காலம் பயிற்சி, மகளிர் மட்டும்).
மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் (10ம் வகுப்பு தேர்ச்சி, 1 ஆண்டு காலம் பயிற்சி, ஆண், பெண் இருபாலரும்). ஆப்ரேட்டர் அட்வான்சுடு மெஷின் டூல்ஸ் (10ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டு பயிற்சி காலம், ஆண், பெண் இருபாலரும்).
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரு பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலலவச பேரூந்து கட்டண சலுகை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை அரசால் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு கருர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324&222111, 9499055711) வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.