- பதிரா
- காளியம்மன் கோயில்
- நன்செய் புக்லூர்
- வேலாயுபாளையம்
- பத்திரகாளி கண்டியம்மன் கோவில்
- நன்செய் புகழூர், கரூர் மாவட்டம்
- நன்செய் புகழூர்
வேலாயுபாளையம், ஜூலை 8: கரூர் மாவட்டம் நன்செய் புகளூரில் உள்ள பத்திரகாளி கண்டியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு பத்ரகாளி கண்டியம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களு க்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
The post நன்செய் புகளூர் பத்திர காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.