×

ஓட்டலில் பெண் போலீசுடன் ஜாலி காவலராக டிஎஸ்பி பதவியிறக்கம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் ஓட்டல் அறையில் பெண் காவலருடன் ஜாலியாக இருந்த விவகாரத்தில் டிஎஸ்பி காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் கிரிபா சங்கர் கன்னுஜா. இவர் பணிக்கு வீட்டில் பணி இருப்பதாக கூறி விடுப்பு எடுத்து இருந்த நிலையில் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் இவரை காணாமல் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் கான்பூரில் உள்ள ஓட்டல் அறையில் பெண் காவலருடன் கிரிபா சிக்கினார். இது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி கிரிபா சங்கர் தற்போது காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது அனைத்து பதவி உயர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிபா பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓரு ஆண்டு உள்ள நிலையில் அவர் காவலராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஓட்டலில் பெண் போலீசுடன் ஜாலி காவலராக டிஎஸ்பி பதவியிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Uttar Pradesh ,Kripa Shankar Kannuja ,Unnao district ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே...