×

நீட் தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வு களில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகளால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 2017ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் மட்டும் எழுப்பப்பட்ட குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இதனைபுரிந்து கொண்டு ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நீட் தேர்வை ரத்து செய்ய வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…