×

நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு

நாகர்கோவில், அக். 22: நாகர்கோவில் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்பட பல பழைய பொருட்களை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 3 தொகுப்பாக இந்த ஏலம் நடத்தப்படும், அதற்கான ஏலம் நேற்று(21ம் தேதி) நடத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழைய பொருட்களை ஏலம் எடுப்பதற்காக பல வியாபாரிகள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். ஆணையர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பெட்டியில் ஏலம் பிடிப்பதற்கான டிடி எடுத்து அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து போட்டனர். காலை 11 மணிக்கு அந்த பெட்டியை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்தனர்.

அதன்பிறகும் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக பல வியாபாரிகள் வந்தனர். அவர்கள் காலை 11.30 மணி வரை பெட்டி வைக்கப்பட்டு இருக்கும், ஏன் 11 மணிக்குள் பெட்டியை எடுத்தனர் என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா அங்கு வந்தார். அவரிடம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆணையர் வருகிற 4ம் தேதி ஏலத்தை தள்ளி வைத்தார். இதனை தொடர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ள வந்த அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகததில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil Corporation ,Nagercoil ,Nagercoil Municipal Corporation ,
× RELATED கன்னங்குளத்தில் பொது கழிப்பறை சீரமைப்பு