×

ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!!

ஹரியானா: ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி காதல் ஜோடி காசியாபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும். இவர்களுக்கு பெற்றோர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததை மீறி இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில், ஹரியானா மாநிலம் ஹன்சி பகுதியில் புதுமண தம்பதிகள் இன்று காலை பூங்காவில் நடந்து சென்றிருக்கும் பொழுது மர்ம நபர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்து சரமாரியாக துப்பாக்கியால் தம்பதியினரை சுட்டு கொலை செய்தனர். திருமணம் நடைபெற்று இரு மாதங்களே ஆனா நிலையில் கொலை செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஆண் நபர் சுல்தான் பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அந்த பெண் சடலா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உடலில் 4, 5 தோட்டா காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கொலை நிகழ்ந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக தம்பதியினரின் கிராமத்திற்கு விரைந்தனர். இது ஆவண கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Haryana ,Ghaziabad ,
× RELATED ஹரியானா பேரவைத் தேர்தல்: லோக் தள், பகுஜன் சமாஜ் கூட்டணி