×

மாடு முட்டி முதியவர் பலி

திருப்புத்தூர், ஜூன் 23: திருப்புத்தூர் அருகே நெற்குப்பை பகுதியில் உள்ள பரியாமருதிப்படியில்  பரியாமருதீஸ்வரர் சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருப்புத்தூர் அருகே செண்பகம்பேட்டையைச் சேர்ந்த பெரியய்யா (70) என்பவர் மாடு முட்டி படுகாயம் அடைந்தார். அதன்பின், அவர் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெற்குப்பை போலீசார் பெரியய்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post மாடு முட்டி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Manjuviratu , ,Pariyamarudeeswarar Sevugamurthy Ayyanar temple festival ,Pariyamarutipedi ,Nelkupai ,Periyiya ,Senpakampet ,
× RELATED பட்டமளிப்பு விழா