- தினம்
- காமராஜ் பொறியியல் கல்லூரி
- விருதுநகர்
- சர்வதேச யோகா தினம்
- யோகா தின போட்டிகள்
- காமராஜ் பொறியியல் கல்லூரி
விருதுநகர், ஜூன் 23: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு யோகா போட்டிகள் நடைபெற்றது. மாணவர் பிரிவில் 3ம் ஆண்டு மாணவர் வாசன், மாணவிகள் பிரிவில் முதலாம் ஆண்டு மாணவி நித்யா முதல்பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சிவனேஷ் குமார் பதக்கங்கள், பரிசுகளை வழங்கினார். கல்லூரி செயலாளர் தர்மராஜன், பொருளாளர் முருகன், முதல்வர் செந்தில் பாராட்டினர்.
The post காமராஜ் பொறியியல் கல்லூரியில் யோகா தின போட்டிகள் appeared first on Dinakaran.