×

டூவீலரில் விபத்தில் மாற்றுத்திறனாளி காயம்

போடி, ஜூன் 23: போடி அருகே டூவீலர் விபத்தில் மாற்றுத்திறனாளி காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போடி அருகே ரெங்கநாதபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் அசோகன் (62. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மாலை ரெங்கநாதபுரம் மெயின் ரோடு சாலையை கடந்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வேகமாக வந்த போடி அருகே சிலமலைமணியம்பட்டியை சேர்ந்த சோனைமுத்து என்பவர் அசோகன் மீது மோதி காயம் ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்று விட்டார். விபத்தில் காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அசோகனின் மகள் செல்வி(28) அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post டூவீலரில் விபத்தில் மாற்றுத்திறனாளி காயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Asokan ,1st Street, Renkanathapuram ,Renkanathapuram Main Road ,Dinakaran ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு