×

வீடுகளுக்கு இடையே சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்பு

திருவாடானை, ஜூன் 23: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் ஜேசுராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது அந்த பசுமாடு குடியி
ருப்பு பகுதியில் உள்ள இரு வீடுகளின் சுவற்றுப் பகுதியின் இடையில் சென்றபோது வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் பசுமாட்டை வெளியே கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியாததால் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் சிக்கி கொண்ட பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post வீடுகளுக்கு இடையே சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Orikottai ,Jesuraj ,Kudi Rupu ,
× RELATED படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்