×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஈரோடு, ஜூன் 23: ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், பண்டாரம் சந்து பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் பாசில் என்கின்ற பப்பாளி (27) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Karungalpalayam police ,MGR Nagar ,BP ,Agraharam ,Bandaram ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது