×

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் 700 பேர் தேர்ச்சி பெறவில்லை: சுப்ரீம்கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல்

புதுடெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் 700 பேர் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் மற்றொரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் 23ம் தேதி (நாளை மறுநாள்) நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் வரும் 30ம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 8ம் தேதி விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விக்ரம்நாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில், ‘தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1,563 மாணவர்களில் 700 பேர் ஏற்கனவே எழுதிய தேர்வில் தோல்வியடைந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. எனவே இவ்விசயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்’ என்று கோரப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அரசு பதிலளிக்க ேநாட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

The post நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் 700 பேர் தேர்ச்சி பெறவில்லை: சுப்ரீம்கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,NEET ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...