×

முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்: அரசாணை வெளியீடு

சென்னை: முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது.

ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும். 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க அனுமதித்து ஆணையிடப்படுகிறது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Sweet Pongal ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...