×

கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் 18ம் தேதி வரை செயல்படாது: அரசு அறிவிப்பு

சென்னை: ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வரும் 18ம் தேதி வரை கலைஞர் நூற்றாண்டு பூங்கா செயல்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவானது, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி இன்று 15ம் தேதி முதல் 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் 18ம் தேதி வரை செயல்படாது: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Park ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு...