×

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வான 10,000 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை: NITES அமைப்பு

சென்னை: தகவல் தொழில்நுட்ப துறையில் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் புதிய பட்டதாரிகள் பணி அமர்த்தபடுவது இருவது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வான 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தற்போது வரை வேலை வழங்கப்படாத தகவலும் வெளியாகியுள்ளது. 2024 நிதி ஆண்டில் இதுவரை இந்தியாவில் உள்ள மென்பொருள் சேவை நிறுவனங்கள் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேரை பணி அமர்த்தியுள்ளனர். இது 20 ஆண்டுகளில் இல்லாத மிக குறைவான எண்ணிக்கை என மனிதவள நிறுவனமான எக்ஸ்பெனோ தெரிவித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற் முன் ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் ஐ.டி பட்டதாரிகள் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் பணியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே முக்கிய இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய நியமனங்களை குறைத்து விட்டதாக மனிதவள ஆய்வாளர்களும், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தெரிவிக்கின்றன. பொதுவாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவங்கள் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் இறுதி ஆண்டு மாணவர்களை பணியமர்த்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் திட்டமிட்டு ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கல்லூரிகளை அணுகுவது வாடிக்கை.

ஆனால் இந்த ஆண்டு புதிய மாணவர்களை பணியமர்த்த இதுவரை ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. பல நிறுவனங்கள் 2023ல் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வான மாணவர்களை இன்னும் பணிக்கு எடுக்கவில்லை என கல்லூரிகள் குறை கூறுகின்றன. கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் தேர்வான 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஐடி நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் NITES அமைப்பு தெரிவித்துள்ளது. உறுதி அளித்தபடுத்தி 2000 பேருக்கு வேலை வழங்காத இன்போசிஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு NITES அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் சில ஐடி நிறுவனங்கள் மிக தாமதமாக கேம்பஸ் இன்டெர்வியூவை தொடங்கியுள்ள போதும் நியமனங்கள் எண்ணிக்கை 70 முதல் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த தொய்வு நிலை வரும் மாதங்களில் சீரடையும் என்று கேம்பஸ் இன்டெர்வியூவை எதிர்பார்த்துள்ள இளம் பட்டதாரிகள் நம்பலாம் என்கிறார்கள் மனிதவள நிபுணர்கள. இந்நிலையில் டாடா கன்சல்டண்சி சர்விஸ் நிறுவனம் இந்த ஆண்டு கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் 40ஆயிரம் ஐடி பட்டதாரிகளை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

The post கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வான 10,000 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை: NITES அமைப்பு appeared first on Dinakaran.

Tags : NITES ,CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...