×

படகு சேதமடைந்து நீரில் மூழ்கி பலியான 3 மீனவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: படகு சேதமடைந்து நீரில் மூழ்கிய விபத்தில், உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு தலா ரூ..3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த IND-TN-11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15ம்தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில், மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சி, அன்னை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் (50), பரக்கத்துல்லா (45) மற்றும் கலீல் முஹம்மது (32) ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ..3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், பாமணி வருவாய் கிராமம், வெள்ளங்குழி (தேவேந்திரபுரம்) என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சதீஷ்குமார் (34) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post படகு சேதமடைந்து நீரில் மூழ்கி பலியான 3 மீனவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,Ramanathapuram District, Mandapam ,Stalin ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...