×

சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

சென்னை: புத்தகம் என்பது அரு மருந்தாகும். எதிர் மறையான சிந்தனை வரும்போது நமக்கு பலமான ஆறுதல் தருவது புத்தகம்தான் என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறினார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஜெகநாத் எழுதிய ‘சென்னையின் முதல் குரல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று ெசன்னையில் நடந்தது. இந்தியாவிலேயே முதல் பத்திரிகையை தொடங்கி நடத்திய கஜலு லட்சுமிநரசு செட்டியின் வாழக்கை வரலாற்றையும், சுதந்திரத்திற்கு முந்தைய பத்திரிகை சுதந்திரம் மற்றும் அப்போதைய நிகழ்வுகளையும் வரலாற்று ஆய்வு பின்னணியுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

அவர் பேசியதாவது: இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு சமூகங்களில் இருந்து வந்தவர்களும் ஒருங்கிணைந்து போராடியுள்ளனர். ஆனால் துயரம் என்னவெனில் அவர்கள் இந்நாட்டிற்காக என்னென்ன தியாகங்களை செய்துள்ளார்கள் என்பதில் பலவும் மறக்கப்பட்டுள்ளது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் மறக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன் என்றார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் மூத்த நீதிபதியும் தற்போதைய மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எஸ்.வைத்தியநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று மக்களிடம் விழிப்புணர்வை வளர்த்தவர்களில் தென்னிந்தியாவில் மிக முக்கியமானவர் கஜலு லட்சுமிநரசு செட்டி தொடர்பான இந்த புத்தகம் வரலாற்று நிகழ்வு ஆதாரங்களுடன் படைக்கப்பட்டுள்ளது. புத்தகம் என்பது அறிவை வளர்க்கும் முக்கியமான ஆயுதமாகும். நமக்கு எதிர்மறையான சிந்தனை வரும்போது நமக்கு முழு ஆறுதல் தருவது நல்ல புத்தகங்கள்தான். புத்தகம் என்பது சிறந்த மருந்தாகும் என்றார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் சுந்தர் மோகன், லட்சுமி நாராயணன், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, சந்திரசேகர் பங்கேற்றனர்.

The post சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Justice S. Vaidyanathan ,CHENNAI ,Justice S. Vaithyanathan ,P. Jagannath ,Justice S. Vaidyanath ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...