×

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு

 

உடன்குடி, ஜூன் 16: திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடி 3வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் சலீம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: உடன்குடி பேரூராட்சி 3வது வார்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்காக தெருக்களில் பேவர் பிளாக் சாலை, தார் சாலை அமைத்து தர வேண்டும்.

மக்களுக்கு குடிநீர் செல்லக்கூடிய மெயின் பைப்புகள் அடிக்கடி நொறுங்குவதால் திடமான பைப்புகள் பதிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறு மின்விசை தொட்டிகள் அமைத்து தருவதுடன் அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், ஆய்வு செய்து உடனடியாக அனைத்து பணிகளையும் உடன்குடி பேரூராட்சி மூலமாக செய்து தருவதாக உறுதியளித்தனர்.

The post திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Ekengudi ,Ebengudi ,3rd Ward ,Councilor ,Mumtaz Salim ,Ebengudi Municipal Corporation 3rd Ward ,jamabandhi ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...