×

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை

களக்காடு, ஜூன் 15: களக்காடு அருகேயுள்ள மேலகாடுவெட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெகன் முத்துராஜ் (34). தொழிலாளி. இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜெகன் முத்துராஜிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மனைவி ராஜேஷ்வரி கண்டித்ததால் அவர்களுக்குள் அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்தது. எனினும் ஜெகன் முத்துராஜ் மது அருந்தும் பழக்கத்தை கைவிடாததால் அவரது மனைவி ராஜேஷ்வரி, தனது மகனுடன் அவரை விட்டு பிரிந்து தூத்துக்குடிக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜெகன் முத்துராஜ் விரக்தி அடைந்தார். இதற்கிடையே கடந்த 10ம் தேதி ஜெகன் முத்துராஜ் தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Thangaraj ,Jagan Muthuraj ,Melagaduvetti South Street ,Rajeshwari ,Thoothukudi ,
× RELATED தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு