×

அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

 

புதுக்கோட்டை, ஜூன் 14: அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற பொறியியல் பட்டதாரிகள், விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (கும்பகோணம்) தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமா தகுதியான பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல்/ தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் பட்டதாரிகள் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழில் பயிற்சிக்காக தொழில் பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இணையத்தளம் www.boat.srp.comஐ பார்த்து தெரிந்துகொள்ளலாம். இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க ஜூலை 8ம் தேதி கடைசி நாளாகும். சம்பந்தப்பட்ட படித்த மாணவர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்), புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,Pudukottai ,Pudukottai Zone ,General Manager ,Ilangovan ,Tamil Nadu Government Transport Corporation ,Kumbakonam ,Vocational Training Board ,Dinakaran ,
× RELATED அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற் பயிற்சி பெற அழைப்பு