×

கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்

தேவகோட்டை, ஜூன் 12: தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு சாருகேசன், ஐஸ்வர்யா, நந்தகுமார்,கல்பனா மற்றும் நான்கு வயது குழந்தை ஆகியோர் காரில் சென்றனர். காரினை சாருகேசன் ஓட்டி வந்தார். தேவகோட்டையில் இருந்த கல்லலுக்கு மருங்கிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் சரக்கு வாகனத்தில் சென்றார்.

தேவகோட்டை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை முள்ளிக்குண்டு என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த ஆறாவயல் போலீசார் காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

The post கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Devakottai ,National Highway ,Sarukesan ,Aishwarya ,Nandakumar ,Kalpana ,Kulithlai ,Karur district ,RS Mangalam ,Karina Sarukesan ,Dinakaran ,
× RELATED நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து