×

விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு

விருதுநகர், ஜூன் 11: விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகளாக 573 மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 8 ஆண்டுகளாக பணியில் இருந்த மஸ்தூர் பணியாளர்களில் 222 பேரை மட்டும் பணி செய்ய அனுமதித்து விட்டு, 350 பேர் பணி நீக்கம் செய்துள்ளனர். டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த மஸ்தூர் பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என அரசு ஊழியர் சங்கம் முன்னெடுப்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தொடர் போராட்டங்களுக்கு பிறகும் மாவட்ட நிர்வாகம் மஸ்தூர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், ‘மீண்டும் எங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

The post விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Collector Office ,Virudhunagar ,Virudhunagar district ,
× RELATED இன்சூரன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம் சிறை