×

சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 9ம் தேதி பதவியேற்பு

காங்டோக்: சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள எஸ்கேஎம் கட்சி தலைவர் பிரேம் சிங் தமாங் வரும் 9ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். சிக்கிமில் மக்களவை தேர்தலுடன் 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில், ஆளும் பிராந்திய கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைப் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முதல்வராக எஸ்கேஎம் கட்சி தலைவர் பிரேம் சிங் தமாங் வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இது குறித்து நேற்ற பேட்டி அளித்த அவர், ‘‘கடந்த 5 ஆண்டுக்கு முன் பதவியேற்பு விழா நடந்த அதே பல்ஜோர் ஸ்டேடியத்தில் வரும் 9ம் தேதி எனது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடத்தப்படும். இந்த வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றி தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களவை தேர்தலில் சிக்கிமின் ஒரே தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஒன்றியத்தில் நாங்கள் பாஜ கூட்டணிக்கு ஆதரவளிப்போம்’’ என்றார்.

The post சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 9ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Prem Singh Tamang ,Chief Minister ,Sikkim ,SKM ,Sikkim Assembly elections ,Lok Sabha ,
× RELATED 2வது முறையாக சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு