×

பாகிஸ்தானுடன் 2வது டி20 கேப்டன் பட்லர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி

பர்மிங்காம்: பாகிஸ்தான் அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில், இங்கிலாந்து 23 ரன் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் மைதானத்தில் மே 22ம் தேதி நடக்க இருந்த முதல் டி20 போட்டி கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச… இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 84 ரன் (51 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். வில் ஜாக்ஸ் 37, ஜானி பேர்ஸ்டோ 21, ஃபில் சால்ட் 13 ரன் எடுத்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் 12, லிவிங்ஸ்டன் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி 3, இமத் வாசிம், ஹரிஸ் ராவுப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.2 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் பாபர் ஆஸம் 32, பகார் ஸமான் 45 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), இப்திகார் 23, இமத் வாசிம் 22 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டாப்லி 3, மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2, கிறிஸ் ஜார்டன், அடில் ரஷித், லயம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 3வது டி20 போட்டி கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.

 

The post பாகிஸ்தானுடன் 2வது டி20 கேப்டன் பட்லர் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : England ,Pakistan ,Captain Butler ,Birmingham ,Leeds Stadium ,Dinakaran ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...