×

ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

*திரளானோர் வடம்பிடித்தனர்

ஏர்வாடி : நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் உள்ள பழமைவாய்ந்த திருவழுதீஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயிலில், இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் 9ம் திருநாளான நேற்று விமரிசையாக நடந்தது.

இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரமாகி சுவாமி- அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளியதும், ஸ்ரீவைகுண்டம் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கொடியசைத்து தேரோட்டத்தை துவக்கிவைத்தார். இதில் ஏர்வாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளாகப் பங்ேகற்ற பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.

தேரோட்டத்தில் ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தஸ்லீமா அயூப்கான் உள்ளிட்ட இஸ்லாமிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தரிசனம் செய்தது மத நல்லிணக்கத்திற்கு அச்சாரமாகத் திகழ்ந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கோயில் பக்தர்கள் சார்பில் மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் ஊர் மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Vaikasi Festival Chariot ,Airwadi Thiruvalhutheeswarar Temple ,Thiralanor Vadampidanthan ,Airwadi ,Vaikasi festival ,Thiruvalhutheeswarar Udanurai Periyanaiaki Ambal temple ,Airwadi, Nellai district ,Swami ,Ambal ,Parivar Murthys ,
× RELATED தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7...