×

விராலிமலையில் 3வது நாளாக தொடர் கோடை மழை

 

விராலிமலை, மே 21: விராலிமலையில் 3வது நாளாக பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பள்ளி விடுமுறை அளித்தும் மாணவர்கள் வெளியில் சென்று நண்பர்களுடன் இணைந்து விளையாட கூட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. பெரியவர்கள், சிறியவர்கள் வயது முதிர்ந்தோர் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது சற்று நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தப்பினர். கடந்த சில நாட்களாக விராலிமலை பொதுமக்களை ஏமாற்றி வந்த மழை தற்போது மூன்றாவது நாட்களாக தொடர்ந்து கன மழையாக செய்து வருவதால் நகர் பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post விராலிமலையில் 3வது நாளாக தொடர் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Pudukottai district ,Illuppur ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு கவுரவ தொகை உடனே வழங்க வேண்டும்