×

சேரன்மகாதேவியில் பைக் விபத்தில் விவசாயி பலி

வீரவநல்லூர்,மே 21: சேரன்மகாதேவி அருகே சங்கன்திரடு பகுதியை சேர்ந்தவர் அரிராம் மகன் நவநீதகிருஷ்ணன் (59), விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை சேரன்மகாதேவி ரவுண்டானா கீழ்புறம் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது விகேபுரம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த எலிசபெத் மகன் கவுதம் (22) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், நவநீதகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் சேரன்மகாதேவி போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நவநீதகிருஷ்ணன் பலியானார். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சேரன்மகாதேவியில் பைக் விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Veeravanallur ,Ariram ,Navaneethakrishnan ,Sanganthiradu ,Pethanpillai ,Vikepuram ,Cheranmakadevi ,
× RELATED சேரன்மகாதேவி உத்திராசெல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா