×

பல்லடம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது

திருப்பூர், மே 16: நான் முதல்வன் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 258 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள்அளிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் மூலம் 32 ஆயிரத்து 258 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்ண பிரியா கூறியதாவது:
நான் ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறேன். எனது பள்ளி படிப்புடன் கூடுதல் படிப்பு படிப்பதற்கான போதுமான நேரம் கிடைக்கவில்லை. அதனை பூர்த் செய்கின்ற வகையில் தமிழக முதலமைச்சர் நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிவித்து அத்திட்டம் மூலம் எங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற வகையில் இத்திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டம் மூலம் எங்களது படிப்பு சார்ந்த தொழில்நுட்ப படிப்புக்கான பயிற்சிகளும். சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. எங்களைப்போன்ற ஏழை,எளிய மாணவ, மாணவியர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு அனைத்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post பல்லடம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரிப்பு