×

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

பெங்களூரு: பாலியல் முறைகேடு வழக்கு தொடர்பாக ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக வீடியோ பரவியது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு இவ்வழக்கை கர்நாடக மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வரும் பெண்ணும் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தங்களுக்கு எதிராக புகார் அளிக்க கூடாது என்பதற்காக அப்பெண்ணை ரேவண்ணாவின் உதவியாளர் கடத்தி சென்று வேறு இடத்தில் சிறைவைத்துள்ளார். இது தொடர்பாக தேவகவுடாவின் மகனும் ஹாசன் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அப்பெண்ணை தேவகவுடா வீட்டில் இருந்து மீட்டனர். இதன் மீதான விசாரணைக்கு பிறகு ரேவண்ணா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்தில் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளதாவது, ‘ஹாசன் எம்பி பிரஜ்வல் மீது பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் புகார் அளிக்க முன்வரவில்லை. அதே சமயம் கர்நாடக போலீஸ் அதிகாரிகள் என்று மப்டியில் வந்த 3 பேர் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அவர்களுடன் ஒரு பெண் வந்திருந்தார். அவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார். பின்னர் புகாரை எழுதி தரும்படி கேட்டபோது, மூன்று பேர் என்னை மிரட்டி அழைத்து வந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்க வற்புறுத்துகின்றனர்.

என்னுடைய குடும்ப நலன் கருதி வேறு வழியின்றி பொய் புகார் அளிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். கர்நாடக மாநில அரசு எஸ்ஐடி குழுைவ அமைத்து பாலியல் வழக்கை விசாரணை நடத்தி வருகின்றது. அவர்கள் உறவினர் பெண்ணை கடத்தியாக எம்எல்ஏ ரேவண்ணா உள்பட 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய மகளிர் ஆணையத்துக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆன்லைனில் 700 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக சமூகவலைதள செயல்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அது தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மஜத மனு
பாலியல் வழக்கு தொடர்பாக ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு படை நடத்தி வரும் விசாரணை தடம் மாறி செல்வதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மஜதவினர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து எஸ்ஐடி விசாரணை தடம்மாறி செல்வதால், இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

The post பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Prajwal ,National Commission for Women ,Bengaluru ,Hassan ,Prajwal Revanna ,Karnataka Hassan Lok Sabha Constituency ,Dinakaran ,
× RELATED பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த...