×

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது.

வெப்பத்திலிருந்து விடுபட சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா சென்று வெப்பத்தை தணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து லேசான குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி, சேலம், திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர், நாமக்கல், கோவை, ஈரோட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

The post தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணிக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Chennai ,Dharmapuri ,Nilgiris ,Salem ,
× RELATED வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன்...