×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 40 சதவீதம் பீர் விற்பனை

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால டாஸ்மாக் கடைகளில் 40 சதவீதம் கூடுதலாக பீர் விற்பனையாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி செல்கின்றனர். மேலும் மது பிரியர்கள் விஸ்கி, பிராண்டி போன்ற மதுவகைகளை விட கூலிங் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் கட்டுப்பாடு காரணமாக 3 நாள் விடுமுறை, மகாவீர் ஜெயந்தி விடுமுறை காரணமாக பெரும்பாலான கடைகளில் ஸ்டாக் தீர்ந்து போனது. இதனால் திங்கட்கிழமை விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை சற்று உயர்ந்து வருகிறது.

வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்குகின்றனர். தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்க்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங்க் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங்க் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங்க் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகிறது. 40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் பீர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 40 சதவீதம் பீர் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர்...