×

வெயில் தாங்காமல் இளம்பெண் தற்கொலை

ஈரோடு: ஒடிசா மாநிலம், பாலானா மாவட்டம் பலாஸ்பூரை சேர்ந்தவர் சரோஜ் மாலிக் (35). இவரது மனைவி சபிதா மாலிக் (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் ஈரோடு வந்து, சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கினர். சரோஜ் மாலிக் அப்பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திலும், சபிதா மாலிக் லுங்கி தயாரிக்கும் நிறுவனத்திலும் பணிபுரிந்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் வெயில் கொளுத்துவதால், தனக்கு வயிற்று வலி அதிகமாகி வருவதாகவும், அதனால், சொந்த ஊருக்கு சென்று விடலாம் என சபிதா மாலிக் தனது கணவரிடம் கூறினார். அதற்கு, சரோஜ் மாலிக், கடன்களை அடைத்த பிறகு ஊருக்கு செல்லலாம் என மனைவியிடம் கூறினார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சரோஜ்மாலிக் வேலை முடிந்து வீடு திரும்பினார். குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கததவை சரோஜ் மாலிக் நீண்டநேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சபிதா மாலிக் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வெயில் கொடுமை தாங்காமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஈரோடு தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வெயில் தாங்காமல் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Saroj Malik ,Balana District Balaspur, Odisha State ,Sabita Malik ,Surambati Kowalan ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு