×

விபத்தில் மாணவர்கள் 6 பேர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு அருகே இன்று அதிகாலை சாலையோரம் சரக்கு வேன் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் மீது வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்தது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் சங்கீதன் (22), மணிகண்டன் (19), குமரன் (20), கவின் (21), கவுதம் (23), ஆனந்தன் (21) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த ஒரு மாணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post விபத்தில் மாணவர்கள் 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Kodangipalayam ,Tiruppur District Palladam Gowai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் கைது