×

இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ் கேம்ப்: நேரம்: காலை 6.30. இடம்: சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி, திருச்சி. திருச்சியில் வீட்டை அடித்து நொறுக்கி பைக் தீ வைத்து எரிப்பு

 

திருச்சி, ஏப்.21: திருச்சி சின்னக்கடை வீதியில் வீட்டை அடித்து நொறுக்கி பைக்கை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று கொண்டிருந்த இவரது பைக்கை தீயிட்டு கொளுத்தினர்.

நள்ளிரவில் திடீரென அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பைக்கை அணைத்தனர். பைக் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை போலீசில் புகார் அளித்தார், கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ் கேம்ப்: நேரம்: காலை 6.30. இடம்: சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி, திருச்சி. திருச்சியில் வீட்டை அடித்து நொறுக்கி பைக் தீ வைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Summer Sports ,Santhanam Vidyalaya Senior Secondary School ,Trichy ,Fort ,Chinnakadai Road, Trichy ,Suresh Kumar ,Chinnakadai Road ,Tiruchi ,Sports ,Dinakaran ,
× RELATED சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சந்தானம்...