×

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

 

சேலம், ஏப்.21: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 17, 18 மற்றும்19ம்தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 3நாட்களுக்கு பிறகு நேற்று டஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபாட்டில்கள் வாங்க காலை முதலே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகாவீர் ஜெயந்தியை யொட்டி இன்று (21ம்தேதி) டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியிருப்பதாவது: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் இன்று (21ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மூடப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறுகலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post டாஸ்மாக் கடைகள் இன்று மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Salem ,Mahavir Jayanti ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர்...