×

ஆந்திராவில் மே 13ம் தேதி தேர்தல் காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா, அமைச்சர் ரோஜா மனுதாக்கல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் மே 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, அமைச்சர் ரோஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதி, 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பாளருக்கான மனுதாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் சட்டப்பேரவைக்கு 236 வேட்பு மனுக்கள் தாக்கலானது. மக்களவைக்கு 46 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு தரப்பில் குப்பம் தொகுதிக்கு அவரது மனைவி புவனேஸ்வரி குப்பத்தில் உள்ள வரதராஜ சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து பேரணியாக சென்று வேட்புமனுதாக்கல் செய்தார். நகரி தொகுதியில் போட்டியிட அமைச்சர் நடிகை ரோஜா மண்டல வருவாய்த்துறை அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடப்பா கலெக்டர் அலுவலகத்தில் அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

The post ஆந்திராவில் மே 13ம் தேதி தேர்தல் காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா, அமைச்சர் ரோஜா மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Congress ,president ,Sharmila ,minister ,Roja ,Andhra Pradesh ,Tirumala ,YS ,Lok Sabha ,Andhra state ,state ,Roja Manuthakkal ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...