×

திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் அவரது மனைவியும், தர்மபுரி பாமக வேட்பாளருமான சவுமியா அன்புமணி ஆகியோர் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீ மரகதாம்பிகை அரசு உதவிபெறும் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர் ராமதாஸ் கூறுகையில், ‘மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்’ என்றார்.

அன்புமணி கூறுகையில், ‘வாக்காளர்கள் மவுனபுரட்சி நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை தொடர்கிறது. இது நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும். தேர்தல் ஆணையம் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டும்தான் வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது’ என்றார்.

The post திண்டிவனத்தில் வாக்களித்த ராமதாஸ், அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Anbumani ,Tindivana ,Villupuram ,Bamaga ,Ramadas ,president ,Dharmapuri Bamaga ,Soumya Anbumani ,Sri Sri Maragathambikai Government Aided School ,Tindivan, Villupuram district ,Ramdas ,Dindivan ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...