×

மின் நுகர்வு ஏப்ரல் 17ல் புதிய உச்சம் 442.74 மி.யூனிட்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்.20ம் தேதி மாநிலத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 423.785 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 20ம் தேதியே 423.79 மில்லியன் யூனிட் பதிவாகி கடந்த ஆண்டின் உச்ச அளவை கடந்தது.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் 26ம் தேதி 426.44 மி.யூ., ஏப்.2ம் தேதி 430.13மி.யூ., ஏப்.3ம் தேதி 435.85மி.யூ., ஏப்.4ம் தேதி 440.89மி.யூ., ஏப்.5ம் தேதி 441.18மி.யூ. என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது. தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை மின் வாரியம் எட்டியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் (ஏப்.17ம் தேதி) மின் பயன்பாடு 442.71 மில்லியன் யூனிட்டாக பதிவானது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நம் மாநிலத்தின் மின் பயன்பாடு புதிய உச்சமாக நேற்று முன்தினம் (ஏப்.17ம் தேதி) 442.74 மில்லியன் யூனிட்டை தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஏப்.5ம் தேதி பதிவான 441.18 மி.யூ. அதிகபட்சம் மின் நுகர்வாக இருந்தது. எனினும் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் உறுதி செய்தது என கூறப்பட்டுள்ளது.

The post மின் நுகர்வு ஏப்ரல் 17ல் புதிய உச்சம் 442.74 மி.யூனிட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...