×

3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்

முல்லன்பூர்: ஐபிஎல் டி20 தொடரில், முல்லன்பூரில் இன்று இரவு நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதுகின்றன.நடப்பு தொடரில் மும்பை, பஞ்சாப் அணிகள் இதுவரை தலா 6 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில்… 2 வெற்றி, 4 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. மொத்த ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் 7வது இடத்திலும், மும்பை அணி 8வது இடத்திலும் உள்ளன. டெல்லி, குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவியது. இன்று தனது 7வது ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. அதிரடி வீரர்கள் பலர் இருந்தாலும், யாரும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அணிக்கு பின்னடைவாக உள்ளது.ஏறக்குறைய அதே நிலைமையில்தான் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் இருக்கிறது.

ஹாட்ரிக் தோல்வியால் துவண்டிருந்த மும்பை அணி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்சை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டது. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிராக போராடி தோற்றது. இந்த நிலையில், பஞ்சாப் – மும்பை அணிகள் 3வது வெற்றிக்காக இன்று முட்டி மோதுகின்றன. சென்னையுடன் மோதிய கடந்த போட்டியில் ரோகித் அதிரடியாக சதம் விளாசினாலும், மற்ற வீரர்கள் கணிசமாக பங்களிக்கத் தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே, ரன் குவிப்பு மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை உள்ளது. இரு அணிகளுமே 3வது வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Punjab ,Mullanpur ,IPL T20 ,Dinakaran ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...