×

பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும் வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜ அரசுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தனது சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார்.

அந்த வகையில் இறுதி கட்ட பிரசாரம் செய்ய குடியாத்தம் வந்த போது நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு மோர் குடுத்தாங்க… குடித்த உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல.

வலி அதிகமாகவும் சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ.ல அட்மிட் பண்ணி, இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Chennai ,Vellore ,Mansoor Alikhan ,Democratic Tigers ,India ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பிரபு, வெற்றி இணையும் ஆண்மகன்