×

இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ராகுல் காந்தி

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய அரசியல் சாசனம் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கிறது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் சட்ட கட்டமைப்புகளை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அழிக்க நினைக்கிறது.

காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். சிறப்பான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

The post இந்திய அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,Delhi ,RSS ,Congress ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...