×

வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை கப்சிப் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால இயற்கை முகாம்

புதுக்கோட்டை, ஏப்.18: பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா கோடை கால இயற்கை முகாம் (Summer Nature Camp) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை முகாம் நேற்று நடத்தப்பட்டது. இம்முகாமினை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜு ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வனப்பணியாளர்கள் என மொத்தம் சுமார் 150 நபர்களை நார்த்தாமலை காப்புக்காடு மற்றும் அங்கு உள்ள சுனைலிங்கம், விஜயாலய சோழீஸ்வரம், குடவரை மற்றும் கற்கோயில்கள், அரையகருப்பர் கோயில், குடுமியான்மலையில் சிவன் கோவில், நந்தி மண்டபம், மூலவர் சன்னதி, இசை கல்வெட்டுகள், ஆயிரங்கால் மண்டபம், குடவரை மற்றும் கற்கோயில்கள், சித்தனவாசலில் குடவரை ஓவியம், தியான மண்டபம், தமிழன்னை சிலை, பூங்கா ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டது. இம்முகாமில் கீழ்குறிப்பிட்ட 11 பள்ளியில் இருந்து 8வது
மற்றும் 9வது படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் செல்லப்பட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, திருவப்பூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, மச்சுவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, பாலன் நகர். அரசு உயர்நிலைப்பள்ளி, மதியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மருதாந்தலை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம். பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்தைபேட்டை, நார்த்தாமலை காப்புக்காட்டில் அமைந்துள்ள விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் தொன்மை குறித்தும், அவைகள் உருவான வரலாற்று சுவடுகள் பற்றியும் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜு விரிவாக எடுத்து கூறினார்.

அதன்பின் இயற்கையினை எவ்வாறு நாம் பாதுகாக்க வேண்டும், தற்போது உள்ள சுற்றுச்சூழல் நிலை குறித்தும், பிற்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் குறித்தும் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் முனைவர் ச.சாண்டில்யன் விரிவாக எடுத்து கூறினார்.

குடுமியான்மலையில் தொல்லியல் துறையினை சார்ந்த கார்த்திக் குடுமியான்மலையில் கோயிலின் வரலாற்றினையும், எதனால் இது போன்ற கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டது, எதனால் சிலைகள் சேதமடைந்துள்ளது, எந்த மன்னரால் ஒவ்வொரு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சித்தனவாசல் சுற்றுலா வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. முகாம் ஏற்பாட்டினை புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post வாக்காள பெருமக்களே என்ற வார்த்தை கப்சிப் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால இயற்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Summer Nature Camp ,Kapsip ,Pudukottai ,Summer ,Nature ,Camp ,Department of Environment and Climate Change ,Forest Department ,School Education Department ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!