×

சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு

சேந்தமங்கலம், ஏப்.18: எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டியில் நாமக்கல் -துறையூர் செல்லும் பிரதான சாலையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது.இரவு 8 மணி வரை சந்தை நடைபெறும். சந்தை வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம், சந்தை முடிந்ததும், நள்ளிரவு நேரத்தில் சந்தைக்குள் புகுந்த மர்ம நபர்கள், மின் ஒயர்கள் மற்றும் விளக்குகளை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை, இதையறிந்த பஞ்சாயத்து தலைவர் துளசிராமன், எருமப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், எஸ்ஐ வெற்றிவேல் வழக்குப்பதிந்து, சந்தைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.

The post சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Erumapatti Union ,Potirettypatti ,Namakkal-Thurayur ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்