×

21ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம், ஏப்.17: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 21ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தி அன்று மூடப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

The post 21ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Salem ,Mahavir Jayanti ,Collector ,Brinda Devi ,
× RELATED டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர்...