×

நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை ஆர்.சி.பி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் பேட்டி

பெங்களூரு: உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை பெங்களூரு அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் – பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணி அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்காமல் 262 எடுத்து வெற்றிக்கு அருகில் வந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூரு அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

“என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்” என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவருக்கு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை.

The post நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை ஆர்.சி.பி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : RCB ,IPL ,Glenn Maxwell ,Bengaluru ,Hyderabad ,Dinakaran ,
× RELATED கடின உழைப்புக்கான பலன்: விராட் கோலி நெகிழ்ச்சி