×

தொழிலாளர் ஆணையம் சார்பில் தேர்தல் விடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

சென்னை: மக்களவை தேர்தல் நடைபெறும் 19ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தொழிலாளர் ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூடுதல் தொழிலாளர் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர் தே.விமலநாதன் முன்னிலை வகித்தனர். வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் வேலை அளிப்பவர்கள் கூட்டமைப்பு சார்பில் 100 % வாக்கு பதிவை உறுதி செய்ய அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளை கடைபிடித்து விடுப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

The post தொழிலாளர் ஆணையம் சார்பில் தேர்தல் விடுப்பு விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Leave Awareness ,Labor Commission ,Chennai ,Labour Commission ,Lok Sabha ,U. Umadevi ,Labour ,Vimalanathan ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...